கூடலுார்- -குடியரசு தின விழாவை முன்னிட்டு குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டம் துவங்கியவுடன் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள், மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவைகள் குறித்து பள்ளி சார்பில் மனு வழங்கப்பட்டது.
காலை 10:40 க்கு துவங்கிய இக்கூட்டம் 10:50க்கு முடிவடைந்தது.
கவுன்சிலர்கள், வேளாண் துறையினர், சுகாதார நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கிராம மக்கள் கலந்து கொள்ளாததால் கிராம சபை கூட்டம் பெயரளவிலேயே நடந்தது.