கூடலுார் -கூடலுார் கருணாநிதி காலனி ராஜேந்திரன் 60. விவசாய வேலைக்காக சென்று விட்டு தம்மணம்பட்டியில் இருந்து கூடலுார் நோக்கி டூவீலரில் சென்றார். மந்தை வாய்கால் அருகே குமுளி நோக்கிச் சென்ற அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.