சாணார்பட்டி--சாணார்பட்டி அருகே வேலம்பட்டியில் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை ஹெச்.ஐ.எல் எஜுகேசனல் டிரஸ்ட் இணைந்து கலாம் சமத்துவ பொங்கல் விழா உழவர் தின விழா கொண்டாடப்பட்டது. ஜி.டி.என். பேராசிரியர் முருகானந்தம் தலைமை வகிதார். ஹெச்.ஐ.எல்., எஜூகேஷனல் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் மகேந்திர பிரபு முன்னிலை வகித்தார். சமூக சேவகர் டாக்டர் மருதைகலாம் வரவேற்றார். காதர் பாட்சா தொகுத்து வழங்கினார். பேராசிரியர் பிரேம் குமார், சமூக ஆர்வலர் இன்னாசி ராஜ் பங்கேற்றனர் . சமத்துவ பொங்கல் வைத்து விவசாயிகளுக்கு, கரும்பு பொங்கல் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
அறக்கட்டளை நிர்வாகி மகாலெட்சுமி நன்றி கூறினார்.