பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா, கல்கடவு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது வீட்டின் முன்பாக 28 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.
நேற்று இரவு இப்பகுதிக்கு வந்த சிறுத்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது கவுன்சிலர் முரளி இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனச்சரகர் அய்யனார், வனவர் பிலிக்ஸ் தலைமையிலான வனக்குழுவினர் ஏணி மூலம் சிறுத்தையை மீட்க முயற்சி மேற்க்கொண்டனர். ஆனால் தண்ணீர் அதிகம் இருந்ததால், மூச்சு திணறி சிறுத்தை உயிரிழந்தது. தொடர்ந்து தீயாணைப்பு துறையினர் சிறுத்தையின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.