ஈரோடு, ஜன. 27-
அந்தியூர் கால்நடை சந்தைக்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டிய, தமிழக இந்து மக்கள் முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் கால்நடை வியாபாரிகள் மனு அளித்தனர்.
அந்தியூர் கால்நடை சந்தையின் குத்தகை உரிமையாளர் கார்த்திகேயன் தலைமையிலான வியாபாரிகள், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அந்தியூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட பகுதியில் குத்தகைக்கு கால்நடை சந்தையை நடத்தி வருகிறோம். கடந்த 21ம் தேதி, அதிகாலையில் நடந்த கால்நடை சந்தையில், தமிழக இந்து மக்கள் முன்னணியின் தலைவர் தமிழ்செல்வன், அவரது ஆதரவாளர்கள் சந்தையை நடத்த விடாமல், முற்றுகையிடப்போவதாக மிரட்டினார்.
கால்நடை சந்தையில் அல்லது விற்பனையில் தவறு, சட்ட விதி மீறல் நடந்தால் அதுகுறித்து போலீசில் புகார் செய்யலாம். அதை தவிர்த்து, இந்து அமைப்பு என்ற பெயரில் சந்தையை முற்றுகையிட்டு, மிரட்டல் விடுத்த தமிழ்செல்வன் மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.