கொளத்துார், சென்னை கொளத்துார், சிவசக்தி நகரை சேர்ந்தவர் காத்தாயி, 38. கட்டுமானத் தொழிலாளி.
கணவர் முனுசாமி, 49 திருவண்ணாமலையில் தனியாக வசிக்கிறார். இரண்டு மகன்களுடன் வசித்து வந்த காத்தாயி, பாரம் துாக்கும் உழைப்பு காரணமாக, தினமும் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளானார்.
நேற்று முன் தினம், அளவிற்கு அதிகமான மது போதையில், வீட்டின் கூரையில் உள்ள இரும்பு குழாயில், சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.