ஓட்டேரி, சென்னை ஓட்டேரி, ஸ்டாரன்ஸ் சாலை 3வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல்லா, 24; மாட்டிறைச்சி கடை ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, நியூபேரன்ஸ் சாலை, தர்கா தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுகேப் என்பவர், அப்துல்லாவை வழி மறித்து, பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர், தன்னிடம் பணம் இல்லை என்று, அவரை எதிர்த்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுகேப், அப்துல்லாவை, சரமாரியாக தாக்கி தப்பி சென்றார்.
காயமடைந்த அப்துல்லா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து, விசாரிக்கும், ஓட்டேரி போலீசார், சுகேப்பை தேடி வருகின்றனர்.