மறைமலை நகர், கடந்தாண்டு அக்., 27ல், இங்குள்ள மலையில் ஏறிய கிராம மக்கள், வெடிக்காத நிலையில் கிடந்த மூன்று ராக்கெட் குண்டுகளை கண்டு, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட ராக்கெட் குண்டுகளை, மலையில் பள்ளம் தோண்டி புதைத்தனர்; சுற்றிலும் மணல் மூட்டைகளை அடுக்கி, பாதுகாத்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு கமாண்டோ மருதம் பிரிவு பி.டி.டி.எஸ்., பிரிவு காவல் ஆய்வாளர் தங்கேஸ்வரன் தலைமையில், ராக்கெட் குண்டுகள், மலையில் இருந்து நேற்று, கீழே எடுத்து வரப்பட்டன.
பின், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு, ராக்கெட் குண்டுகள் அதில் வைத்து, பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டன.