திருவொற்றியூர், மணலி - சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, 2.52 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
மணலி, எண்ணுார் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில், பள்ளிகளுக்கான புதிய கட்டடம் மற்றும் எரியூட்டு மயானம் அமைப்பதற்கான, அடிக்கல் நாட்டு விழா, நேற்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில், எம்.பி., கலாநிதி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
எண்ணுார் காமராஜர் துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு நிதி மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து, 2.52 லட்ச ரூபாய் செலவில், உயர்நிலைப் பள் ளிக்கு, ஒன்பது வகுப்பறைகள், தொடக்கப் பள்ளிக்கு நான்கு வகுப்பறைகள் என, 13 வகுப்பறைகள் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், காமராஜர் துறைமுகம் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், மணலி மண்டல குழு தலைவர் ஆறுமுகம், தலைமை ஆசிரியர்கள் உஷா, பியூலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதே போல், எண்ணுார் அனல்மின் நிலையம் தொடக்கப்பள்ளிக்கு, 48 லட்ச ரூபாய் செலவில், இரு வகுப்பறைகள், இரு கழிப்பறைகள் கட்டப் பட்டு வருகின்றன. இதை, எம்.பி., கலாநிதி, பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
திருவொற்றியூர் குப்பம் சுடுகாடு, 1.60 லட்ச ரூபாய் செலவில் நவீன எரியூட்டு மயானம் அமைக்கும் பணி, பூந்தோட்டம் துவக்கப் பள்ளிக்கு, ஐந்து லட்ச ரூபாய் செலவில் இரு வகுப்பறைகள் கட்டும் பணிக்கு, அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு, கவுன்சிலர் உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.