சென்னை,உ.பி., மாநில நபரிடம் மொபைல் போன் பறித்து தப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோக் சஹாணி, 45. இவர், சென்னையில் தங்கி பெயின்டராக பணி புரிகிறார். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், பெரியமேடு ஆர்.எம்., சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு நின்ற மர்ம நபர் அசோக் சஹானியின் மொபைல் போனை பறித்து தப்பினார்.
இது குறித்து பெரியமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், அம்பத்துார் காமராஜர், காமராஜர்புரத்தைச் சேர்ந்த சீனிவாசன், 20, 'மொபைல் போன்' பறித்து தப்பியது தெரியவந்தது.
இதையடுத்து, இவரை நேற்று பிடித்து விசாரித்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரிடம் இருந்து, மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.