புளியந்தோப்பு, நன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு, ஜாமினில் வெளிவர முடியாத, கூடுதல் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
புளியந்தோப்பு, ஜெ.ஜெ.நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் பரத்குமார், 32; ரவுடி. இவர், கடந்தாண்டு ஜூன் மாதம், புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை கமிஷனரிடம், 'திருந்தி வாழப்போவதாக3 உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்தார்.
ஆனால், கடந்த 15ம் தேதி குற்றவழக்கில் சிக்கி கைதானார். நன்னடத்தை விதிமீறியதால், நேற்று, துணை கமிஷனர் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர், பரத்குமாருக்கு, 152 நாட்கள் சிறை தண்டனை விதித்து, உத்தரவிட்டார்.