மரமேறும் தொழிலாளி சாவுசத்தியமங்கலம்,-சத்தி அருகே, கயிறு அறுந்ததில் படுகாயம் அடைந்த, மரமேறும் தொழிலாளி இறந்தார்.பெருந்துறை அருகே வடமுகம் வெள்ளோட்டை சேர்ந்தவர் சுப்ரமணி, 45, மரம் ஏறும் தொழிலாளி. சத்தியமங்கலம் அருகே உள்ள சிவியார்பாளையத்தில், ஒரு தென்னந்தோப்பில், தேங்காய் பறிக்கும் பணிக்காக, இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு ஏறினார். அப்போது கயிறு அறுந்து, 30அடி உயரத்திலிருந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் மாலை இறந்தார். இதுகுறித்து சத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த சுப்ரமணிக்கு, மாரியம்மாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
சட்ட விரோத மாத்திரை;ஈரோட்டில் 4 பேர் கைதுஈரோடு,-ஈரோட்டில் சட்ட விரோதமாக மாத்திரை வைத்திருந்த, நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். ஈரோடு, அக்ரஹாரம், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அன்புராஜ், 23; மாணிக்கம்பாளையம், பாண்டி நகர் தீபக் சவுத்ரி, 21; வில்லரசம்பட்டி நவீன், 21; வீரப்பன்சத்திரம், அசோகபுரம் மணிகண்டன், 30, ஆகியோர் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய வலி நிவாரணி மாத்திரைகள், ஊசியை விற்பனை செய்ய வைத்திருந்தனர். தகவலறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார், நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம், மாத்திரை, ஊசியை கைப்பற்றினர்.
கவுந்தப்பாடியில் இன்றுநாட்டு சர்க்கரை ஏலம்கோபி, ஜன. 28-கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று நாட்டு சர்க்கரை ஏலம் நடக்கிறது.விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த, நாட்டு சர்க்கரை மூட்டைகளை, சணல் நாரால் தைத்து, கல், ஈரப்பதம், சர்க்கரை கட்டி மற்றும் கலப்படமின்றி கொண்டு வருமாறு, கவுந்தப்பாடி விற்பனைக்கூட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரூ.3.27 லட்சத்துக்குகொப்பரை ஏலம்ஈரோடு,-அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை தேங்காயம் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 103 மூட்டை வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 7௬ ரூபாய் முதல், 8௪ ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 53.75 ரூபாய் முதல், 77.77 ரூபாய் வரை, 4,317 கிலோ கொப்பரை, 3.27 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
ரூ.3.14 லட்சத்துக்குஎள் விற்பனைஈரோடு,-சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று எள் ஏலம் நடந்தது. விவசாயிகள், 26 மூட்டை கொண்டு வந்தனர். சிவப்பு ரக எள் கிலோ, 16௪ ரூபாய்க்கு விற்பனையானது. கருப்பு ரக எள் கிலோ, 15௫ ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 1,929 கிலோ எள், 3.1௪ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.