ஈரோடு,-ஈரோடு, பெரிய சேமூரில், பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.வரும், 31ம் தேதி, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 1ம் தேதி பொங்கல் வைபவம் நடக்கிறது. பிப்.,2ம் தேதி காலை கம்பம் பிடுங்கப்பட்டு, அன்றிரவு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.