சென்னை,---ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 30, 31ம் தேதிகளில் நடக்க இருந்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த அறிவிப்பு, 'வாபஸ்' பெறப்பட்டு உள்ளது.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்ட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 30, 31ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது.வேலை நிறுத்தம் தொடர்பாக சமரச பேச்சு, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நேற்று நடந்தது.இதில், இந்திய வங்கிகள் சங்க பிரதிநிதிகளுடன், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ் கே பந்லிஸ், அகில இந்திய வங்கி அதிகாரிகள் பொதுச் செயலர் நாகராஜன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலர் சி.எச்.வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.இந்த பேச்சில், கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, வரும், 30, 31ம் தேதிகளில் நடக்க இருந்த வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு, வாபஸ் பெறப்படுவதாக, கூட்டமைப்பு அறிவித்துள்ளது.