கடம்பூர்,-குன்றி அருகே, யானை மிதித்து தொழிலாளி இறந்தாரா? என, போலீசார் விசாரிக்கின்றனர்.கடம்பூர் அருகே குன்றியை அடுத்த மாக்கம்பாளையம் செல்லும் வழியில், குண்டுக்கல் மேடு வனப்பகுதியில் உடல் சிதைந்து ஆண் சடலம் கிடப்பதாக, கடம்பூர் போலீசார், வனத்துறையினருக்கும் தகவல் போனது. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.இதில் மாகாளி தொட்டியை சேர்ந்த குமார், 35, கூலி தொழிலாளி என்பது தெரிந்தது. கடந்த, 24ம் தேதி வீட்டிலிருந்து பசவன் ஒருத்தி கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை யானை மிதித்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். வனத்துறையினர் கூறும் போது இறந்து மூன்று நாட்களாகி விட்டதால், உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.இறந்த குமாருக்கு மனைவி, இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.