கோபி,-கடம்பூர் வனத்தில், கடமான் மற்றும் உடும்பை வேட்டையாடியதாக, மூவருக்கு தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, கோபி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடம்பூர் வனப்பகுதியில் கடந்த, 2012, நவ., மாதத்தில், டி.என்.,பாளையம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கடமான், உடும்பை வேட்டையாடிய கடம்பூரை சேர்ந்த வீரன், 29, வேலுச்சாமி, 37, ஜடைசாமி, 37, ரங்கன், 30, கண்ணன், 32, என ஐந்து பேரை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு நடக்கும்போதே கண்ணன் மற்றும் வேலுச்சாமி இறந்தனர். இந்நிலையில் வழக்கில் நீதிபதி விஜய் அழகிரி நேற்று தீர்ப்பளித்தார். கடமான் மற்றும் உடும்பை வேட்டையாடிய மூவருக்கும் தலா மூன்றாண்டு சிறை தண்டனை, 27 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.