கோவை-மோட்டார் மெக்கானிக்கிடம், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஆசாமிகளை , போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை அருகேயுள்ள இருகூரை சேர்ந்தவர் செல்வராஜ். சிந்தாமணிப்புதுாரில் மோட்டார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். மதுரைக்கு சென்ற இவர், கடந்த 26 ம் தேதி, இருகூர் பிரிவில் பஸ்சிலிருந்து இறங்கி, திருச்சி ரோடு, ரயில்வே பாலம் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது, மூன்று ஆசாமிகள் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன் மற்றும் 4,000 ரூபாய் பறித்து தப்பினர்.
புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.