Call to report Dream Makers fraud | 'டிரீம் மேக்கர்ஸ்' மோசடிபுகார் அளிக்க அழைப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'டிரீம் மேக்கர்ஸ்' மோசடிபுகார் அளிக்க அழைப்பு
Added : ஜன 28, 2023 | |
Advertisement
 



கோவை-'டிரீம் மேக்கர்ஸ்' நிதி நிறுவனம் மோசடி செய்த வழக்கில், பணம் கட்டி ஏமாற்றப்பட்டோர் புகார் அளிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

கோவை, சாய்பாபா காலனியில், 'டிரீம் மேக்கர்ஸ் குளோபல் லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

பொதுமக்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு மடங்கு தருவதாக கூறி, 5,000 க்கும் மேற்பட்டோரிடம், பல கோடி ரூபாய் மோசடி செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

எனவே இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபர்கள் இதுவரை புகார் கொடுக்காமல் இருந்தால், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வளாகத்திலுள்ள, பொருளாதார குற்றப்பிரிவில் உனடியாக புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X