கோவை-ஹெல்ெமட் அணியாமல் சென்ற, 937 பேர் மீது, ஒரே நாளில் வழக்கு பதிவு செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை மாநகர காவல் துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஒரு நாள் முழுவதும், மாநகர எல்லலைக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில், ஹெல்ெமட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்ய, அதிரடி சோதனை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, காளப்பட்டி சாலை , கொடிசியா, நவ இந்தியா, பிபிஎல், சரவணம்பட்டி செக் போஸ்ட், துடியலுார் சாலை, காந்திபுரம், சிங்காநல்லுார், பொள்ளாச்சி சாலை, பேரூர் சாலை, பாலக்காடு சாலை, மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, ஆர்.எஸ்.புரம் உட்பட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது.மொத்தம், 3,875 பேரை நிறுத்தி சோதனையிட்டதில், 2,543 பேர் ஹெல்ெமட் அணிந்து வாகனம் ஓட்டினர். 1,282 பேர் ஹெல்ெமட் அணியாமல் சென்றனர். இவர்களில், 937 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 345 பேர் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
நுாதன தண்டனை
சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோடு, நவ இந்தியா சிக்னலில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.
சாலைகளில் சென்ற வாகனங்களை போலீசாருடன் இணைந்து கண்காணித்த அவர், ஹெல்ெமட் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி, விழிப்புணர்வு முகாமிற்கு அழைத்து சென்றார்.
'ஹெல்ெமட் அணிந்து வாகனம் ஓட்டுவேன்' என்று அவர்களை உறுதி மொழி எடுக்க வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.