வடலூர் : தைப்பூச ஜோதி தரிசன திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச ஜோதி தரிசன திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம், வரும் 5ம் தேதி நடக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்கு, தமிழகம் மட்டுமில்லாமல், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் வருவர். மேலும், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களும் அதிகளவில் பங்கேற்பார்கள்.
இந்நிலையில், விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி சேர்மன் சிவக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கமிஷனர் பானுமதி, துணை சேர்மன் சுப்புராயலு முன்னிலை வகித்தனர்.பொறியாளர் சிவசங்கரன் வரவேற்றார்.
கூட்டத்தில், தைப்பூச விழாவிற்கு வரும் ஏராளமான சன்மார்க்க அன்பர்களுக்கு தங்க இடவசதி, குடிநீர், கழிவறை, தெருவிளக்கு உட்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் கவுன்சிலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.