கடலூரில் வழிப்பறி குற்றங்கள் அதிகரிப்பு! போலீசாரின் அலட்சியத்தால் அவலம்
Added : ஜன 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாவட்டமாக இருந்தது. போலீசாரின் நடவடிக்கைகள் காரணமாக, குற்றங்கள் குறைந்து அமைதியான மாவட்டம் என்ற பெயரை பெற்றது. தற்போது, குற்றச் சம்பவங்கள் மீண்டும் பரவலாக தலைதுாக்கி உள்ளது.

மாவட்டத்தில் இளைஞர்கள் பலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளனர். இதன் விளைவாக, கஞ்சா வாங்கவும், செலவுக்கும் பணம் தேவைப்படும்போதும், திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த திருட்டு, வழிபறி சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 8ம் தேதி முதல், 27ம் தேதி வரை, விருத்தாசலம் சப் டிவிஷனில் 8 திருட்டு சம்பவங்களும், பண்ருட்டி சப் டிவிஷனில் 1 திருட்டு சம்பவமும் நடந்துள்ளன. சேத்தியாதோப்பு சப் டிவிஷனில் 2 திருட்டு சம்பவங்களும், சிதம்பரம் சப் டிவிஷனில் 4 திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளன.

கடலுார் சப் டிவிஷனில் 7 திருட்டு மற்றும் வழிப்பறி குற்றங்கள் பதிவாகியுள்ளன. மற்ற சப் டிவிஷன்களுடன் ஒப்பிடும்போது, கடலுாரில் அதிகளவு வழிபறி குற்றங்கள் பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் தலைநகரான கடலுாரில் அருகருகே 3 போலீஸ் நிலையங்கள் உள்ளன. கூப்பிடும் துாரத்தில் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் உள்ளது. இவ்வளவு இருந்தும் குற்றச் சம்பவங்களை போலீசாரால் தடுக்க முடியாதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



மடக்கி பிடித்த மக்கள்




இந்நிலையில், கடலுார் கூத்தப்பாக்கம் வங்கி நகரை சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி புஷ்பா, 75, நேற்று காலை அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வள்ளலார் நகரில் குடிநீர் தொட்டி அருகே வந்தபோது, 15 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் மூதாட்டியை வழிமறித்து, அவரிடமிருந்த மொபைல்போனை பறித்தனர். இதில் பதறிய அவர் கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததால், 2 சிறுவர்களும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அதில் ஒருவன், அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி தப்பினான். மற்றொரு சிறுவனை, அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிடிபட்ட சிறுவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுவர்கள் கடலுார் அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கடலுாரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. சிறுவர் என்பதால் சீர்திருத்தப் பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கடலுாரில் தொடர்ந்து அதிகரித்து வரும் வழிபறி, திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, போலீசார் அலட்சியம் காட்டாமல் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-----------------

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X