திண்டுக்கல்:
* திண்டுக்கல் ஓம் சாந்தி சி.பி.எஸ்.சி., பள்ளியில் பள்ளி தாளாளர் பழனிச்சாமி கொடியேற்றினார். முதல்வர் ரம்யா முன்னிலை வகித்தார்.
* திண்டுக்கல் கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் சலீமா பேகம் கொடியேற்றினார். நிர்வாக முதல்வர் முத்துச்சாமி, அதிகாரி முகமது ராபி முன்னிலை வகித்தனர்.
* திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மேடா வித்யாலயாவில் முதல்வர் வனிதா கொடியேற்றினார்.
* திண்டுக்கல் அட்சுயுதா பப்ளிக் பள்ளியில் செயலாளர்கள் மங்கல்ராம், காய்திரி கொடியேற்றினார். சீனியர் முதல்வர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
* அழகு மடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெகதாம்பாள் கொடியேற்றினார்.உதவி ஆசிரியர் காந்திமதி முன்னிலை வகித்தார்.
* தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய அலுவலகத்தில் குடியரசு தினவிழா மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் நடந்தது. மாநில இணைச்செயலாளர் சுப்பிரமியம் கொடியேற்றினார்.மாவட்ட பொருளாளர் ராஜேஷ்கண்ணன் நன்றி கூறினார்.
* வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலை அமைப்பு, பராமரிப்பு டிரஸ்ட் சார்பில் குடியரசு தின விழா திருச்சி ரோடு வ.உ.சி., சிலை அருகில் நடந்தது. தலைவர் சந்திரசேகரன் பிள்ளை கொடியேற்றினார்.டிரஸ்ட் செயலாளர் தனபாலன், உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* ஸ்ரீ சாவித்திரி வித்யாசாலா தொடக்க, உயர்நிலைப்பள்ளி குடியரசு தின விழா பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கதலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் நடந்தது. ஓய்வு அரசு மருத்துவர் அமலாதேவி, மகப்பேறு மருத்துவர் செல்வராணி பங்கேற்றனர்.
*பிள்ளையார்நத்தம் டாக்டர் ஜாகிர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சித்தலைவர் உலகநாதன் கொடியேற்றினார். பள்ளி தாளாளர் ஜாகிர் உசேன்முன்னிலை வகித்தார்.
பள்ளி முன்னாள் தாளாளர் ஹாஜி.அப்துல் முத்தலீப், முன்னாள் ஊராட்சித்தலைவர் செல்வராணி, பள்ளி தலைமை ஆசிரியை வர்ஷனி பங்கேற்றனர்.
* பேகம் சாஹிபாநகரம் டாக்டர் ஜாகிர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பள்ளபட்டி ஊராட்சித்தலைவர் பரமன் கொடியேற்றினார்.முன்னாள் வார்டு உறுப்பினர் பாண்டி, பள்ளி தலைமை ஆசிரியை பாத்திமா பங்கேற்றனர்.
* அசனாத்புரம் டாக்டர் ஜாகிர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சின்னத்தம்பி கொடியேற்றினார். பள்ளி தலைமையாசிரியை அம்பிகாதேவி முன்னிலை வகித்தார்.
* காமுபிள்ளை சத்திரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி குடியரசு தினவிழாவில் பள்ளி தலைமையாசிரியர் சரவணன் கொடியேற்றினார். முன்னாள் தலைமையாசிரியர் சுப்பிரமணியன் பங்கேற்றார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் விஜய், சோபனா, செந்தில், ராணி செய்திருந்தனர்.
* சித்தையங்கோட்டை நமது வித்யா சிக் ஷா மேல்நிலை பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் ராஜூ தலைமை வகித்தார்.பள்ளி தாளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.பள்ளி முதல்வர் சுதா, போடிகாமன்வாடி கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா கொடி ஏற்றினார்.
* திண்டுக்கல் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி முதல்வர் ஜார்ஜ் ஸ்டிவன்சன்,நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம் கொடியேற்றினர்.
திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் ராகவன்,செந்தில்குமார் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவி ஜெஸிந்தா ப்ரைசிக்கு சைக்கிள் வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் செல்வின், பள்ளி மாணவர் தலைவர் சாரோன் செபஸ்டியன் பங்கேற்றனர்.மாணிக்கராஜ் நன்றி கூறினார்.
வத்தலக்குண்டு: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி கொடியேற்றினார். துணைத் தலைவர் முத்து முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் உதயகுமார், இந்திராணி பங்கேற்றனர்.
* நகர கூட்டுறவு வங்கியில் தலைவர் கணேசன் கொடியேற்றினார்.
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வட்டார கல்வி அலுவலகத்தில் தலைமையாசிரியர் நாகேந்திரன் கொடியேற்றினார். வட்டார கல்வி அலுவலர் அமல்ராஜ் உதவி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தேசிய மாணவர் படை அலுவலர் வேல்முருகன் தலைமையில் மாணவர் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.