Palaniswami said that the DMK itself thinks that this government should go home | 'இந்த ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும்' தி.மு.க.,வினரே நினைப்பதாக பழனிசாமி பேச்சு | ஈரோடு செய்திகள் | Dinamalar
'இந்த ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும்' தி.மு.க.,வினரே நினைப்பதாக பழனிசாமி பேச்சு
Added : ஜன 28, 2023 | |
Advertisement
 

ஈரோடு: ''இந்த ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும் என தி.மு.க.,வினரே நினைக்கின்றனர்,'' என, ஓட்டுச்சாவடி முகவர்களிடம் பழனிசாமி பேசினார்.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக, ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் தேர்தல் பணிக் குழு உறுப்பினர்களுக்கான, இரண் டாம் நாள் ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, வாக்காளர் விபரங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது:இந்த இடைத்தேர்தல் அ.தி.மு.க.,வுக்கு மிக முக்கியமான தேர்தல். இத்தேர்தல் முடிவை தமி ழகம் மட்டுமின்றி, இந்தியாவே எதிர் நோக்கியுள்ளது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ஈரோட்டின் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட் டங்களை நோட்டீஸாக அச்சிட்டு ஓட்டு சேகரிக்க வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பண்டிகையின்போது, பரிசு தொகுப்புடன், 2,500 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 5,000 ரூபாய் வழங்குவோம்' என்றார்.

ஆனால், கடந்தாண்டு பொங்கலின்போது தரமற்ற பொங்கல் பொருட்களை வழங்கி, மக்களை ஏமாற்றினார். இந்தாண்டு பொங்கல் தொகுப்பு பொருட்களை நிறுத்தவிட்டு, 1,000 ரூபாய் மட்டும் வழங்கியுள்ளார். தி.மு.க., ஆட்சியில் மின் கட் டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்றவை, சாதாரண மக்களை எவ்வாறு பாதித் துள்ளது என்பதை கூறி ஓட்டு சேகரியுங்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்து, இரண்டாண்டு ஆகவுள்ள நிலையிலும், ஈரோடு தொகுதியில் ஒரு துரும்பு அளவுக்கு கூட திட் டத்தை நிறைவேற்றவில்லை.
அவர் களை பொறுத்தவரை கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் என்பது தான் இந்த ஆட்சி. எனவே, இந்த ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும், என தி.மு.க.,வினரே நினைக்கின்றனர். இவற்றை எல்லாம் மக்களிடம் கொண்டு சென்று, இடைத்தேர்தலுக்கான வியூகத்தை வகுத்து, வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X