ஈரோடு: கிழக்கு தொகுதியில், 11 ஓட்டுச்சாவடிகள் மாற்றம் செய்யப்படவுள்ளன.
மாநகராட்சி காமராஜர் மேல்நிலை பள்ளி மேற்கு பார்த்த தார்சு கட்டடத்தின் அறை எண் 1ல் அமைந்துள்ள ஓட்டுச்சாவடி, ராஜாஜிபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் அமைந்துள்ள தெற்கு பார்த்த தார்சு கட்டடத்தின் நடுவில் உள்ள அறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஈரோடு வாசுகி வீதி தமயந்தி பாபுசேட் நகராட்சி திருமண மண்டபத்தின் பிரதான கட்டடத்தின் தெற்கு பகுதி ஓட்டுச்சாவடி, ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலை, செங்குந்தர் ஆரம்ப பள்ளியின் வடக்கு பார்த்த தார்சு கட்டடத்தின் வகுப்பு அறை-1-ஏ-க்கு மாற்றப்படுகிறது.தமயந்தி பாபுசேட் மண்டப கிழக்கு பகுதி ஓட்டுச்சாவடி, செங்குந்தர் ஆரம்ப பள்ளியின் வடக்கு பார்த்த தார்சு கட்டடம் வகுப்பறை-4-ஏ-க்கு மாற்றப்படுகிறது. மண்டபத்தின் வடக்கு பகுதி ஓட்டுச்சாவடி, லலிதா கல்வி நிலையம் நடுநிலை பள்ளி கிழக்கு பார்த்த தார்சு கட்டட வகுப்பறை-1-ஏக்கு மாற்றப்படுகிறது.
காந்திஜி சாலை அரசு மேல்நிலை பள்ளியில் மேற்கு பார்த்த புதிய தார்சு கட்டடம் வடக்கு பார்த்த அறை ஓட்டுச்சாவடி, பூந்துறை சாலை செயின்ட் மேரீஸ் உயர்நிலை பள்ளி வடக்கு பார்த்த தார்சு கட்டடத்தின் நடுவில் உள்ள அறைக்கு மாற்றப்படுகிறது.பாலு சுப்பராயலு வீதி ரயில்வே காலனி மாநகராட்சி நடுநிலை பள்ளியின் மேற்கு பார்த்த தார்சு கட்டட தெற்கு பகுதி அறை எண்-1 ஓட்டுச்சாவடி, ஸ்டோனி பிரிட்ஜ் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி வடக்கு பார்த்த தார்சு கட்டட மேற்கு பகுதிக்கும், விடுதியின் வடக்கு பார்த்த சிமென்ட் சீட்டால் வேயப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கட்டடத்துக்கும் மாற்றப்படுகிறது.
பழைய ரயில்வே சாலை, சி.இ.ஓ., அலுவலக தெற்கு பார்த்த சிமென்ட் சீட் கட்டட மேற்கு பகுதி ஓட்டுச்சாவடி, அங்குள்ள சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளி மேற்கு பார்த்த ஓட்டு கட்டடத்தின் தெற்கு பகுதி அறைக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.