தர்மபுரி,: தர்மபுரியில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில், நாளை நடக்கும் முகாமில் தேர்வு செய்யப்படுவோர், 12 மணி நேர ஷிப்ட் முறையில், இரவு மற்றும் பகல் என பணிபுரிய வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும். இதற்காக தனியாக படி எதுவும் வழங்கப்படமாட்டாது. டிரைவர் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 முதல், 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். எழுத்து, தொழில்நுட்பம், கண்பார்வை மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும். மாதம், 15 ஆயிரத்து, 235 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். மருத்துவ உதவியாளர்கள், பி.எஸ்சி., நர்சிங் முடித்திருக்க வேண்டும். அல்லது அறிவியல்துறை சார்ந்த படிப்பு படித்திருக்க வேண்டும். மாதம், 15 ஆயிரத்து, 435 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044-28888060, என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.