ஓசூர்,: தேசிய வாலிபால் போட்டியில் வெண்கலம் வென்ற மாணவிக்கு, ஓசூர் மேயர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
டில்லியில் தேசிய அளவிலான சப்-ஜூனியர் வாலிபால் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக பெண்கள் அணியில், ஓசூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின், பத்தாம் வகுப்பு மாணவி தனலட்சுமி இடம் பெற்றார்.
இப்போட்டியில் தமிழக அணி மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது. இப்போட்டியில் வெண்கலம் வென்ற மாணவி தனலட்சுமியை, மாநகர மேயர் சத்யா, பள்ளி தலைமையாசிரியர் லதா, உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் முருகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எல்லோராமணி, பயிற்சியாளர்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.