கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 இடங்களில் ஆதார் அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம், ஓசூர், மத்துார், பர்கூர், போச்சம்பள்ளி, மிட்டப்பள்ளி, மகனுார்பட்டி அஞ்சல் அலுவலகங்களிலும், ஓசூர் மோரனப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி, அஞ்செட்டி குறிஞ்சி மலர் தொடக்கப்பள்ளி, சாப்பரம் மோரனஹள்ளி அரசு தொடக்கப்பள்ளி ஆகிய, 10 இடங்களில் இன்று ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது.
இதில், புதிய ஆதார் அட்டை பதிவு செய்ய கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் பாலின, திருத்தங்கள் மேற்கொள்ள, 50 ரூபாய்,- கண்விழி, புகைப்படம் மற்றும் கைரேகை திருத்தங்கள் மேற்கொள்ள, 100 ரூபாய் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். ஆகவே, ஆதாரில் மாற்றம் செய்ய விரும்புவோர், உரிய ஆவணங்களுடன் ஆதார் சிறப்பு முகாம் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.