தொடர்ந்து, 11:50 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி கலந்து கொள்கிறார். அதையடுத்து, மதியம், 1:00 மணிக்கு, மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை, துவக்கி வைக்கிறார். 2:00 மணிக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், தலைவர் கருணாநிதி குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
மாலை, 4:30 மணிக்கு, திருச்செங்கோடு செல்லும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ப.வேலுார் சாலை, வாலரை கேட் ரவுண்டானா அருகில், 60 அடி உயர கம்பத்தில், கட்சிக் கொடி ஏற்றுகிறார்.
தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு, கரட்டுப்பாளையத்தில், மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கட்சிக்கு உழைத்த, 1,000 முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார்.அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவை, மாவட்ட நிர்வாகமும், கட்சி நிகழ்ச்சியை, கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.