சாத்துார்,-சாத்தூர் நகராட்சியில் 13 வது வார்டில் ரோடு, வாறுகால், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இவ்வார்டுக்குட்பட்டது காட்டு புதுத்தெரு, கான்வெண்ட் தெற்குத் தெரு, சுந்தரானந்த பஜனைமட வடக்குத்தெரு, சுந்தரனந்தா பஜனை மடம் தெற்கு தெரு.
காட்டு புது தெருவில் ரோடு மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் பாதையில் மழை நீர் குளம் போல் தேங்வதால் இப்பதியினர் மழைக்காலத்தில் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தெரு விளக்குகளும் மிகவும் குறைவாக உள்ளதால் இரவு நேரத்தில் காட்டுப் புதுத்தெரு இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
கான்வெண்ட் தெற்கு தெருவில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இங்கே கேட் வால்வு கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்தால் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்கும்.
குடிநீர் போதுமான அளவு கிடைக்காததால் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
சுந்தரானந்தா பஜனை மட தெருவில் ரோட்டில் நடுவில் அடிகுழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிகுழாய் மீது மோதி விபத்திற்கு ஆளாகி படுகாயம் அடைகின்றனர்.
அடிகுழாயை அகற்றிவிட்டு மினி பவர் பம்புடன் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். காட்டு புது தெருவில் நடுப்பகுதியில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டு உள்ளது.
மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லை சாலையில் மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.