திருச்சுழி,- -திருச்சுழி அருகே மேலபரளச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் எனர்ஜி கிளப் மன்றம் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.
அருப்புக்கோட்டை துணை மின் செயற்பொறியாளர் பத்மநாபன் தலைமை வகித்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியை கீதா ராணி வரவேற்றார். ஆசிரியர் சையது சிக்கந்தர், எனர்ஜி கிளப் ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரபா விழாவை ஒருங்கிணைத்தனர்.