அருப்புக்கோட்டை,---அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தின் முன் பகுதியில் புத்தக சுவர் திறப்பு விழா நடந்தது.
நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி திறந்து வைத்தார். கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இது குறித்து நகராட்சி தலைவர் சுந்தர லட்சுமி கூறுகையில், பொதுமக்கள், மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை அதிகரிக்க நகராட்சியில் நாங்கள் புத்தக சுவர் ஏற்படுத்தியுள்ளோம். இதில் பல்வேறு வகையான புத்தகங்கள், போட்டி தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் பொது அறிவு, பல்வேறு துறைசார் புத்தகங்கள் உள்ளன. மாணவர்கள் இங்கு வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து குறிப்புகள் எடுத்துச் செல்லலாம். இதை முற்றிலும் இலவச சேவை. பொதுமக்களும் இங்கு வந்து புத்தகங்களை படிக்கலாம். நாளடைவில் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்றார். நகராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், கவுன்சிலர் சிவப்பிரகாசம், திமுக நகரச் செயலாளர் மணி கலந்து கொண்டனர்.--