விருதுநகர்,-விருதுநகர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள ஜன.26 குடியரசு தினத்தில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையாளர் காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணியில் அமர்த்திய 65 நிறுவனங்கள் செயல்பட்டது கண்டறியப்பட்டது.
இதன் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.