ராமேஸ்வரம்,-- கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகில் 450 பேர் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்,என ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸிடம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன் மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
1974 கச்சத்தீவு ஒப்பந்தம் 5வது சரத்தின் படி திருவிழாவில் பாரம்பரியமாக நாட்டுப்படகில் மீனவர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.
அதன் படி மார்ச் 3, 4ல் நடக்கும் திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 25 நாட்டுப்படகில் தலா 18 பேர் வீதம் 450 பேர் செல்ல முடிவு செய்யப்பட்டது.
இவர்களுக்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணத்திற்கு செல்லும் நாட்டுப்படகிற்கு தலா 100 லிட்டர் டீசலை அரசு இலவசமாக வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.