ஓசூர்:தடையை மீறி நடக்கவிருந்த எருது விடும் விழாவை தடுத்து நிறுத்திய, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார், ஒன்பது பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தில், உரிய அனுமதி பெறாமல் எருது விடும் விழா நடத்த ஏற்பாடு நடந்தது.
இதையறிந்த பேரிகை போலீசார், விழாவுக்கு ஏற்பாடு செய்த சின்னாரன்தொட்டியை சேர்ந்த நான்காவது வார்டு உறுப்பினர் மஞ்சுநாத், 43; தனஞ்செயன், 36, ஆகியோரை கைது செய்தனர். இதேபோல, ராயக்கோட்டையை அடுத்த சொன்னியம்பட்டி கிராமத்தில், தடை மீறி எருதாட்ட விழாவுக்கு ஏற்பாடு செய்ததாக, அதே பகுதியை சேர்ந்த அன்பழகன், 50, குள்ளன், 60, பெருமாள், 50 ஆகியோரை கைது செய்தனர்.
அதுபோல, பால்னாம்பட்டியில் விழா நடத்த முயன்றதாக செல்வம், 35, மாது, 45, உட்பட நால்வரை ராயக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.