திருச்சி:திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில், நேற்று திடீர் சோதனை நடத்திய போலீசார், ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, 100க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன், அந்த முகாமில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள், அங்கிருந்த சிலர், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அது தொடர்பாக, ஐந்து பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், திருச்சி போலீஸ் துணை கமிஷனர்கள் அன்பு, ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் சிறப்பு முகாமில் அதிரடி சோதனை நடத்தினர்.
நேற்று காலை, 6:00 மணி முதல், மூன்று மணி நேரம் நடத்திய சோதனையில், ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.