விழுப்புரம்:''தமிழகத்தில், 60 வயதை தாண்டிய அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை, வீடு தேடி வழங்கப்படும்,'' என, அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், பனமலை ஊராட்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் பெரியசாமி, பேசியதாவது:
கூட்டுறவு வங்கிகளில், 5 சவரனுக்கு குறைவாக நகை அடகு வைத்து, கடன் பெற்றவர்களின் 5,000 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், 12 ஆயிரத்து 410 கோடி ரூபாய் அளவுக்கு, அனைத்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய, நிதி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தமிழகத்தில், 60 வயதை தாண்டிய அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை, வீடு தேடி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், கலெக்டர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.