காரைக்குடி:காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் வீடு முன் இருந்த ஈ.வெ.ரா., சிலையை அதிகாரிகள் அகற்றினர்.
சிவகங்கை மாவட்டம், உதயம் நகரில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த இளங்கோவன், 33, புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். வீட்டின் முகப்பில் மார்பளவு ஈ.வெ.ரா., சிலையை நிறுவி, குளத்துார் மணி, சிலையை திறக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் தாசில்தார் கண்ணன், தேவகோட்டை டி.எஸ்.பி., கிருஷ்ணகுமார் இளங்கோவன் வீட்டிற்கு வந்து சிலை வைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம், உரிய அனுமதி பெற்று தான் சிலை வைக்க முடியும் எனக் கூறி அதை அப்புறப்படுத்தினர்.