� பொது �
விழிப்புணர்வு முகாம்
கண் பரிசோதனை மற்றும் கண் தானம் விழிப்புணர்வு முகாம், கண் தானம் குறித்து, டாக்டர் மாயா விளக்கவுரை, ஏற்பாடு: காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் குமார்ஸ் கண் சிகிச்சை மையம், எஸ். ஆர். நீரிழிவு சிகிச்சை மையம், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 9:00 மணி.
அன்னதானம்
365 நாள் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:0-0 மணி.
↓மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
↓ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.
ஸப்தஸ்வரா இசை நிகழ்ச்சி
எஸ்.எஸ்.கே.வி., பள்ளி அரங்கம், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.
� ஆன்மிகம் �
வெள்ளி விழா
திருவண்ணாமலை கிரிவலக்குழு வெள்ளி விழா, வழக்கறுத்தீஸ்வர் கோவில் இருந்து, சிவகாமி உடனாய நடராஜ பெருமான், மாணிக்கவாசகர் சிவ வாத்தியபேரிகை முழங்க, கோலாட்டத்துடன் வீதியுலா புறப்பாடு, காஞ்சிபுரம். காலை 6:30 மணி. நிகழ்ச்சி, விழா நடைபெறுமிடம்: தொண்டை மண்டல ஆதிசைவ சமுதாயக் கூடம், காமராஜர் வீதி, காஞ்சிபுரம். காலை 8:00 மணி.
பெரிய புராணம் சொற்பொழிவு தலைப்பு: நீலகண்ட நாயனார் புராணம், சொற்பொழிவாளர்: புலவர் அண்ணா சச்சிதானந்தம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம். மாலை 6:00 மணி.
ராகு கால பூஜை
விஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம். மாலை 4:30 மணி.
↓துர்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர். மாலை 4:30 மணி.
↓கனக துர்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம். மாலை 4:30 மணி.
சிறப்பு அபிஷேகம்
பரணி நட்சத்திரம், எமனுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி. காக்கைக்கு அன்னபிரசாதம் வைத்தல், காலை 10:00 மணி.
↓கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.
↓நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர். காலை 8:00 மணி.
தைப்பூச பெருவிழா
சந்திரசேகரர் புறப்பாடு, பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில், பெருநகர். காலை 6:00 மணி; சொற்பொழிவு, தலைப்பு: நீலச்சிகண்டியில் ஏறும்பிரான், சொற்பொழிவாளர், புலவர் தீனபந்து, மாலை 5:30 மணி; முருகர் மயில் வாகனத்திலும், விநாயகர் பெருச்சாளி வாகனத்திலும் ஏசல், சந்திரசேகரர் புறப்பாடு, இரவு 7:00 மணி;
மகாபாரத சொற்பொழிவு
ஏற்பாடு: ஐந்து தெரு செங்குந்த மரபினர்கள், சொற்பொழிவாளர்: முத்துகணேசன், கவி வாசித்தல்: தேவராஜன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதியம்மன் கோவில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். மதியம் 2:00 மணி.
நித்யபூஜை சிறப்பு வழிபாடு
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
↓பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
↓காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை, 7:00 மணி.
↓இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை, 7:00 மணி.
↓வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.
↓சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
↓வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
↓விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.
↓சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.
↓மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
↓காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.
↓கற்பக விநாயகர் கோவில், கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.