அச்சிறுபாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் அருகே சோத்துப்பாக்கம் ஊராட்சி, போக்குவரத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 44. இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். நேற்று இரவு வீட்டில், பெற்றோர் இல்லாததால், ஜெகதீஷ் மகன் கவியரசன், 14, இரவு வீட்டை பூட்டி பக்கத்து வீட்டிற்கு துாங்கச் சென்றுள்ளார்.
காலை, துாங்கி எழுந்து வந்து, பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 15 சவரன் நகை, 80 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரித்து வருகின்றனர்.