காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. 40 வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடை இணைப்புகளில் சேகரமாகும் கழிவு நீரை 'பம்பிங் ஸ்டேஷன், லிப்டிங் ஸ்டேஷன்' மூலமாக வெளியேற்றப்படுகிறது.
கழிவு நீரை பிரித்து அனுப்பும் இந்த பம்பிங் ஸ்டேஷன்களை பராமரிக்க, மாநகராட்சி ஊழியர்கள் இல்லாததால், பல ஆண்டுகளாகவே தனியார் நிறுவனம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்கிறது.
பாதாள சாக்கடை அமைப்பை பராமரிக்க ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அடுத்த மூன்று ஆண்டுகள் பாதாள சாக்கடை அமைப்பை பராமரிக்க தேவையான நிதியை மாநகராட்சி நிர்வாகம் இப்போது ஒதுக்கீடு செய்துள்ளது.
அதாவது, 2023 ல் 2.33 கோடி ரூபாயும், 2024ல் 2.56 கோடியும், 2025ல் 2.82 கோடி என, 7.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான கருத்துருக்கள் நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பி, அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.