காஞ்சிபுரம், தமிழக கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளர்கள் மற்றும் கிடங்கு காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு நேற்று டி.என்.பி.எஸ்.சி., சார்பில் எழுத்து தேர்வு நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 4,412 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2,102 பேர் தேர்வு எழுதினர். 2,310 பேர் கலந்து கொள்ளவில்லை.
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இதற்கான தேர்வு நடந்தது.
தேர்வு மையத்திற்குள் 9:00 மணிக்குள் இருக்க வேண்டும். ஆனால் தேர்வு எழுத வந்த சிலர் 9:05 மணிக்கு வந்ததால் அவர்களை தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்க வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் சாலையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின் போலீசார் அவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்.