மதுராந்தகம்,
மதுராந்தகம் அருகே, பயணியரை ஏற்றுவதற்காக, பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்த, அரசு பேருந்து மீது, தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று, மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையப் பணி மனைக்கு சொந்தமான தடம் எண் டி.23 பேருந்தை, விண்ணம்பூண்டியில் இருந்து, மதுராந்தகம் நோக்கி, சுப்பிரமணி, 45, என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார்.
அப்போது, மதுராந்தகம் அருகே, திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிலாவட்டம் பேருந்து நிறுத்தத்தில், பயணியரை ஏற்றுவதற்காக, நின்றபோது, அதே மார்க்கத்தில், சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த 'எம்.ஆர்.எம்., டிராவல்ஸ்' பேருந்து, மோதியது.
இதில், இரு பேருந்துகளிலும் சேர்த்து ஆறு பேர், சிறிய அளவிலான காயமடைந்தனர்.
சிறிய காயம் அடைந்தவர்கள், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மதுராந்தகம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.