காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பாபாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 27, ஓரிக்கையில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவர் கடையில் தடை செய்யப்பட்ட 'ஹான்ஸ்' விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தவகல் கிடைத்தது.
போலீசார் கடையில் சோதனை செய்து ஹான்ஸ் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதே போல் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த சஞ்சய், 20, கண்ணன், 31 ஆகிய இருவரும் வேண்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பதாக ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்கு சென்ற போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயன்ற இருவரையும் பிடித்தனர்.
அவர்கள் வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
மேலும் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த மோன்குமார், 46, அவர் கடையில் ஹான்ஸ் விற்பனை செய்வதை அறிந்து அவர் கடையில் இருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த மாகரல் போலீசார் அவரை கைது செய்தனர்.