சித்தாமூர், சித்தாமூர் ஒன்றிய கிராம கோவில் பூசாரிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம், பொலம்பாக்கத்தில் நேற்று நடந்தது.
கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டு, ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கப்படும், விண்ணப்பங்களை பரிசிலிக்க தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆகையால், ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பயன் பெற விரும்பும் கிராம கோவில் பூசாரிகள், நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வது, ஓய்வூதிய திட்டத்தின் வாயிலாக பயனடைய எவ்வாறு விண்ணப்பிப்பது என ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில், சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட பூசாரிகள் பங்கேற்றனர்.