சித்தாமூர், சித்தாமூர் அருகே, சூணாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட தாங்கல் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
கிராமத்தில் நியாயவிலைக் கடை இல்லாததால், பல ஆண்டுகளாக 3 கி.மீ., துாரம் உள்ள வில்லிப்பாக்கம் கிராம நியாய விலை கடையில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.
புதிய நியாய விலை கடை அமைக்க பல ஆண்டுகளாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நியாய விலைக் கடையில் வாங்கிய பொருட்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்ல 20 - 30 ரூபாய் வரை கேட்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், ஆய்வு செய்து, பகுதி நேர நியாய விலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.