கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம், நந்தி வரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி 23 வது வார்டில் உள்ள வேதாத்திரி காலனியில் குடிநீர் பிரச்னை இருந்துள்ளது. தற்போது நகராட்சி சார்பில் மினி லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுவருவதாகவும், இந்த தெருவில் சுமார் 50 பத்து வீடுகளுக்கு மேல் உள்ளது.
இந்த தெருவிற்கு நகராட்சி சார்பில் புதிய 'பைப்லைன்' அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதை உடனடியாக சரி செய்து, குடிநீர் பைப்லைன் மூலம் வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் நளினியுடன் நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக்கை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
கோரிக்கையை பெற்றுக்கொண்ட தலைவர் விரைவில் சரிசெய்து தருவதாக தெரிவித்தார்.