திருப்போரூர் திருப்போரூர் சொத்துத் வரி மற்றும் குடிநீர் வரி பாக்கி நிலுவை உள்ளது.
இதனை சீரமைக்கும் வகை யில், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் உத்தரவின் பேரில், சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், மற்றும் ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று மேற்கு மாடவீதி, ஏரிக்கரை தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.