செங்கல்பட்டு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலையில், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இந்த சாலையில், போக்குவரத்து அதிகமாக செல்லும் பகுதியாக உள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் சாலையில், காவலர் குடியிப்பு அருகாமையில், சிறுபாலம் கட்ட, 20 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்து, நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டது.
அதன்பின், பாலப் பணிக்கு 'டெண்டர்' விடப்பட்டது. இதையடுத்து, தனியார் ஒப்பந்ததாரரால் டெண்டர் எடுக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன், பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியில், சிறுபாலப் பணி நடைபெறுவது குறித்து, அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை.
இதனால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள், பாலப் பணி நடக்கும் பகுதியில் விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர்.
இப்பகுதியில், பெரிய விபத்துக்கள் ஏற்படுவதற்குள், அறிவிப்பு பலகை மற்றும் மின் விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலையில், சிறுபாலப் பணி 20 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள், ஒரு மாத காலத்திற்கு முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு. அவர், தெரிவித்தார்.