திருப்போரூர்,திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் 10க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் செயல்பட்டு வருகின்றன.
பல்வேறு பகுதிகளில் இருப்பவர்கள், திருப்போரூரில் கந்தசுவாமி கோவில் இருப்பதாலும், போக்குவரத்து வசதிக்காகவும் திருமணம் நடத்த முன் வருகின்றனர்.
கிழக்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, வணிகர் தெரு போன்ற தெருக்களில் திருமண மண்டபங்கள் உள்ளன. சிலவற்றை தவிர பெரும்பாலான மண்டபங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடமில்லை.
திருமணத்திற்கு வருபவர்கள் மண்டபத்தின் வாசலில் உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
முகூர்த்த நாட்களில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
திருமண மண்டப நிர்வாகத்தினர் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி, திருமணத்திற்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய 'பார்க்கிங்' வசதிகளை ஏற்படுத்தித் தர முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.