செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த, சென்னேரி அருகில், போலீசார் வாகன சோதனையில், நேற்று, ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற கார்கள், போலீசாரை கண்டதும் வேகமாக சென்றன.
பின்தொடர்ந்து, இரண்டு கார்களை மடக்கிய போலீசார் சோதனை செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட, குட்கா போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
காரில் கடத்தி வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 57 கிலோ எடையுள்ள, குட்கா போதைப் பொருட்கள் மற்றும் இரண்டு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுகுன்றம் பகுதியைச் சேர்ந்த முருகப்பன், 50, சங்கர், 43 ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.